Saturday, October 11, 2014

ஆராய்ச்சி, முயற்சி, வெற்றி :



ஆராய்ச்சி, முயற்சி, வெற்றி :

கவலை என்பது மனித சக்தியைக் குன்றச் செய்யும் அறிவின் திசை மாற்றமேயாகும். ஒரு நிமிடம் கூட கவலை என்ற பாதைக்கு எண்ண வேகத்தை விட வேண்டாம். துணிவும் விழிப்பும் கொண்டு முயற்சியாக மாற்றிக் கொள்வதே சிந்தனையாளர்களின் கடமை. கவலை என்பது உடல், அறிவு, குடும்பம், ஊர் உலகம் என்ற துறைகள் அனைத்திற்கும் மனிதனுக்கு நஷ்டமே தரும். முயற்சி எவ்வகையிலேயும் லாபமே தரும்.

இயற்கை வளம் என்ற இன்பப் பேரூற்று மக்களின் அறியாமை என்ற அடுக்குப் பாறைகளால் பலதுறைகளில் மறைக்கப்பட்டுள்ளது. அறிவின் விளக்கமான துணிவு என்ற திருகுயந்திரம் கொண்டு வேண்டிய அளவில் அவ்வின்பத்தை அனுபவிக்கலாம். தேவையுணர்வு, சந்தர்ப்பம் என்பனவற்றால் செயல்களும், செயல்களால் உடலுக்கும், அறிவிற்கும் ஒருவிதமான பழக்கமும் ஏற்பட்டு அப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் எண்ணமும் உடலியக்கமும் நடைபெற்று வருதல் மனிதருக்கு இயல்பு என்றாலும், சிந்தனை, துணிவு, விடாமுயற்சி என்பனவற்றின் மூலம் பழக்கத்தை மாற்றி வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

ஆராய்ச்சி ! முயற்சி !! வெற்றி !!! என்ற மந்திரத்தை தினந்தோறும் பல தடவை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில நாட்களுக்குச் செபித்துக் கொண்டே வர கவலை என்ற வியாதியும் ஒழியும். வாழ்வில் ஒரு புதிய தெளிவான பாதை திறக்கப்படும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

"ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்து
ஊக்கமுடன் உழை, உயர்வு நிச்சயம்".
.

"கவலை யென்பதுள்ளத்தின் கொடிய நோயாம்
கணக்குத் தவறாய் எண்ணம் ஆற்றலாம்,
கவலை யென்பதோ வாழ்வில் சிக்கல் கண்டு
கலங்கி மனம் திகைப்படையும் நிலைமையாகும்;
கவலை உடல்நலம் உள்ள நலன் கெடுக்கும்
கண் முதலாய்ப் பொறி ஐந்தின் வளம் கெடுக்கும்,
கவலையினை முயற்சி சிந்தனை இவற்றால்
கடமையினைத் தேர்ந்தாற்றி வெற்றி கொள்வோம்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

Friday, July 11, 2014

முத்திரை..!



முத்திரை..!


முயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்....


1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.


2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.


3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.


4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.


5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.


6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.


7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.


.9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.


10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.


11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.


இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.

Tuesday, July 8, 2014

கருமையம் தூய்மையாக இருக்கட்டும்:


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

கருமையம் தூய்மையாக இருக்கட்டும்:

உடலுக்கு மூலப் பொருள் வித்து
உயிருக்கு முக்கியப் பொருள் விண்துகள்கள்
மனதுக்கு மூலப் பொருள் சீவகாந்தம்.

இவை மூன்றும் மையம் கொண்டிருப்பது உடலுக்கு மையமான பகுதியாகிய மூலாதாரம். மூலாதாரம் என்பது மனித உடலுக்கு கருமையம்.

கருமையம் தான் மனிதனின் பெருநிதி; செயலுக்கேற்ற விளைவைத் தரும் தெய்வீக நீதிமன்றம். பிறப்பிற்கும் இறப்பிற்கும், தொடர் பிறப்புகள் பலவற்றுக்கும் இடையே வினைப்பதிவு பெட்டகமாக தொடர்ந்து வரும் மாயத்துணைவன்; தெய்வத்தையும், மனிதனையும் இணைத்துக் காட்டும் அறிவின் பேரின்பக்களம்.

இத்தகைய பெருமை வாய்ந்த கருமையத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்.

1) பெற்றவர்கள், குரு, ஆட்சித்தலைவர், தெய்வம் இவர்களை மதித்து வாழ்தல்.

2) ஒழுக்கம் கடமை ஈகை மூன்றும் இணைந்த அறநெறியை பின்பற்றுதல்.

3) அகத்தவப் பயிற்சியை முறையாகச் செய்து வருதல்.

4) இரத்தம், காற்று, உயிர், சீவகாந்தம் இவை தடையின்றி ஓடி உடலைக் காத்துக் கொள்ள ஏற்ற உடற்பயிற்சிகளை அளவோடு செய்து வருதல்.

5) பெற்றோர்கள், வாழ்க்கைத் துணைவர், பெற்ற குழந்தைகள் இவர்களை பொறுப்போடும் அக்கரையோடும் காத்து உதவி வருதல்.

6) இறைநிலை உணர்ந்து அந்நிலையோடு அடிக்கடி ஒன்றி பழகுதல்.

7) மனித முயற்சியால் உற்பத்தி செய்த பொருட்களையும் இயற்கை வளத்தையும், பிறர் உபயோகிக்கும் பொருட்களையும் சேதப்படுத்தாது மதித்து நடத்தல்.

8) நாம் பார்க்கும் ஒவ்வொரு உடலும் இயற்கை என்ற பேராற்றலால் கட்டப்பட்டிருக்கும் பெருமையை உணர்ந்து உடலுக்குள் அறிவாக விளங்குவது தெய்வத்தின் ஒளியே என்று மதித்து ஒத்தும் உதவியும் வாழ்ந்து வருதல்.

9) உள்ளத்தில் பகை வஞ்சம் எதையும் வைத்துக் கொள்ளாமல் மன்னிப்பும், கருணையும் கொண்டு எல்லோருடனும் இன்முகத்தோடும் அன்போடும் பழகுதல்.

10) தேசம், மதம், சாதி, இனம், மொழி இவற்றால் மனிதரை வேறுபடுத்திக் காணாமல் எல்லோரும் இயற்கையின் மக்கள் என்ற நினைவில் வாழ்தல்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Friday, July 4, 2014

வேதாத்திரியம் : வேண்டியதெல்லாம் கிடைக்கும்



நீ எதிர்பார்த்தது, எதிர்பார்த்தபடி பிறர் மூலமாகக் கிடைக்காது. ஒவ்வொரு மாற்றத்திலும் பிணக்குற்று, பிணக்குற்று ஏமாற்றத்திற்கு ஆட்பட்டு அதனாலே துன்பமானது பெருகிக் கொண்டே போகிறது. இந்த அடிப்படையைத் தெரிந்து கொண்ட பின்னர் "எதிர்பார்த்தல்" என்பதை விட்டு விடுவது நல்லது எனத் தெரிகிறதல்லவா? தொடக்கத்தில் ஒரு வார காலம் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்ற முடிவினை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை ஒரு மாத காலத்திற்கு நீட்டித்துக் கொள்ளுங்கள். (Do not expect anything from anyone for one week to start with and then extend the period to one month).


அதற்குரிய விளைவு நிச்சயமாக உண்டு. நீ எதிர்பார்த்தாலும், எதிர் பார்க்காவிட்டாலும் நீ என்ன செயல் செய்கிறாயோ, அந்தச் செயலுக்குத் தக்க விளைவு வந்துதான் ஆக வேண்டும். நல்லதை எண்ணி, நல்லதை விளங்கிக் கொண்டு, பயனை உணர்ந்து கொண்டு இப்பொழுது செய்கிறேன்; வருவதை ஏற்றுக் கொள்ளச் சித்தமாயிருக்கிறேன் - இந்த அளவு வரும் எனக்கூட எதிர்பாராது நல்லதைச் செய்யும்போது நிச்சயமாக நன்மை பிறக்கும் என்று செய். அவ்வாறு செய்வதற்கு முன்னதாக இன்னொரு ஆராய்ச்சியும் தேவை. அதாவது உன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.


நீ எங்கே இருக்கிறாய், என்னவாய் இருக்கிறாய்? (What you are, where you are and how you are?) உடல் நலத்திலே, வலுவிலே, வயதிலே, அறிவாற்றலிலே அல்லது விஞ்ஞான வளர்ச்சியிலே, பொருள் உற்பத்தி செய்யும் திறமையிலே, அதிகாரத்திலே, சூழ்நிலையிலே உள்ள ஒரு வாய்ப்பிலே நீ எங்கே இருக்கிறாய், எப்படி இருக்கிறாய்? இந்த நிலையில் இருந்து கொண்டு உனக்கு, குடும்பத்திற்கு, சுற்றத்தாருக்கு, ஊருக்கு, உலகுக்கு எந்த அளவிலே நான் நன்மை செய்ய வல்லவன். செய்ய முடியும் என்று கணித்துக் கொள். அதைச் செய்ய எப்பொழுதும் தயாராக இரு; செய்து கொண்டே இரு; வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அளவு மீறிப் போகாமல் இந்த வழியிலே ஒரே ஒரு வாரம் பயிற்சி செய். இன்னும் சரியாக ஊறி வரவில்லை என்றால் இன்னும் ஒரு மாத காலத்திற்கு அந்தப் பயிற்சியை நீடித்து வா அப்போது பார்க்கலாம் - உனக்கு என்ன வேண்டுமோ அவ்வளவும் கிடைக்கும், அதற்கு மேலேயும் கிடைக்கும்.

Monday, May 19, 2014

Simplified Kundalini Yoga (Sky Yoga)


Simplified Kundalini Yoga (Sky Yoga) :

"மனித மனம் பேராற்றல் பெற்ற ஒன்று. மனம் உள் ஒடுங்கவும், பரந்து விரிந்து செல்லவும் உள்ள ஆற்றலைப் பெற்றது. மனதின் புலன் இயக்க வேகத்தைஎல்லாம் கழித்துப் பரமாணு நிலைக்கு ஒன்று படுத்தும்போது இயற்கையின் இரகசியங்களைப் பேரியக்க மணடலத்தில் நிகழும் பல தரப்பட்ட இயக்க வேகங்களை அறிந்து உணர்கிறது. எல்லைக்கு உட்படாத 'மனம்' ஒன்றில்தான் எல்லையற்ற சுத்தவெளியை பரம்பொருளை, பரவெளியை உணர முடியும். அந்த நிலையைப் பெறுவதற்கு உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் உள்ளதே 'அகத்தவம்' (Meditation) எனும் "குண்டலினி யோகமாகும்".

அகத்தவப் பயிற்சினால் தான் அலையும் மனதினை நிலைக்குக் கொண்டுவர இயலும். அலையும் மனதை ஓரிடத்தில் நிலைத்து நின்று நோக்கவில்லையானால், ரங்க ராட்டினத்தில் சுற்றிக் கொண்டிருப்பவன் கண்களுக்குப் பக்கத்தில் உள்ளவர்கள், பக்கத்தில் உள்ள வீடுகள் ஆகியவை படாமல் தப்பிப் போவது போல உலகின் உண்மை நிலைமைகளை மனதால் உணர முடியாது. எனவே மனதினுடைய இயக்க வேகத்தைக் குறைத்துக் குறைத்து இறுதியில் நிலைத்து நின்று நோக்கி அறிதல் வேண்டும். இந்த நோக்கத்தை அருளவல்ல ஒரு உன்னத உளப்பயிற்சியே "குண்டலினியோகமாகும்" (Sky Yoga).

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

Tuesday, May 13, 2014

ஆளுமைத் திறன்

ஆளுமைத் திறன்

இயற்கை வளங்களை வாழ்வின் வளமாக உருமாற்றியும் அழகு படுத்தியும் வாழ்ந்து வரும் மனித இனம் மற்றவர்களோடு பிணக்கின்றி வாழ வேண்டியது மிக அவசியமாகின்றது. இந்த நெறியே அறம் எனப் படுகிறது. இந்தப் பெருநோக்கத்தில் வாழ மனதையும் செயல்களையும் சிந்தனையின் உயர்வுக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். பல ஆயிரம் தலைமுறைகளாக ஆற்றிய எண்ணம், செயல் பதிவுகளால் வடிவம், தரம், திறம் அமையப்பெற்ற மனிதன் தனது ஆளுமை வளத்தைச் சிறப்பித்துக் கொள்ள வேண்டுமெனில், அதற்குஏற்ற உளப் பயிற்சியம் செயல்பயிற்சியும் வேண்டும். புலன்கள் மூலம் உணர்ச்சி நிலையில் வாழும் மனிதனுடைய மன அலைச்சுழல் வினாடிக்கு 14 முதல் 40 வரையில் (Beta Wave) இயங்கிக் கொண்டிருக்கிறது. சிந்தனையாற்றல் பெருக வேண்டுமெனில், மனம் வினாடிக்கு 14 சுழலுக்குக் குறைவான அலை இயக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
மனித அமைப்பில் பரு உடல் (Physical Body), நுண்ணுடல் (Astral Body), பிரணவ உடல் அல்லது சீவகாந்த உடல் (Causal Booy) ஆகிய மூன்றும் ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்து செயல்புரிகின்றன. சூக்கும உடலாகிய உயிர்த்துகள் (Life Force) மனம் வைத்து அகநோக்குப் பயிற்சியினைப் பழக வேண்டும். இந்தப் பயிற்சியில் அனுபவம் பெற்றவர் மூலமே இதை உணர்ந்து பழகும் பயிற்சியே அகநோக்குப் பயிற்சி எனப் படுகிறது. இப்பயிற்சியால் மன அலைச்சுழல் படிப்படியாகக் குறைந்து வினாடிக்கு 1லிருந்து 3 வரையில் வருமேயானால் மனம் அமைதி நிலைக்கு வரும். இந்த மனநிலையில் மனம், உயிர், இறைநிலை என்ற மூன்று மறைபொருட்களையும் உணரும் திறமை மனித மனதுக்குக் கிடைக்கும். தேவையில்லாத, துன்பமே தரும் பதிவுகளை மாற்றி ஆளுமை வளத்தைச் சிறப்பித்துக் கொள்ளவும், இந்தப் பயிற்சியோடு அகத்தாய்வுப் பயிற்சி களையும் பயின்று செய்தால் மனிதனுள் அடங்கி இருக்கும் ஆற்றல்கள் முழுவதையும் வெளிப்படுத்திப் பயன் கண்டு தானும் சிறப்பாக வாழ்வ தோடு, குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்ற அளவில் தன் கடமைகளைச் செய்து நிறைவு பெறலாம். அமைதியும் இன்பமும் பெறலாம்.
அருள் தந்தை

மெளனம்

நாம் கருத்தொடராகப் பெற்ற வினைப் பதிவுகளையும், பிறவி எடுத்த பின் ஆற்றிப் பெற்ற வினைப் பதிவுகளையும் தன்மைகளாகப் பெற்றவர்களாவோம். நம் வினைப்பதிவுகள் அனைத்தும் புதையல் போல உயிர் எனும் இயற்கை கம்ப்யூட்டரில் அடங்கியுள்ளன. காலத்தால் மலரும் அப்பதிவுகளின் வெளிப்பாடுகளே எண்ணங்கள், செயலார்வம், நோய்கள், இன்ப துன்பங்கள் யாவுமாகும்.

ஒரு தொழிலதிபர் அல்லது வணிகர் மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் இருப்பிலுள்ள பொருள்களைக் கணக்கெடுப்பது போல எல்லோருமே மாதத்திற்கு ஒரு நாளோ அல்லது ஆண்டுக்குச் சில நாட்களோ ஒதுங்கிக் கொண்டு நம் இருப்பைக் கணக்கெடுக்க மெளன நோன்பு அவசியம்.

இந்தக் கருத்தோடு, தவத்தால் அறிவை அமைதிக்கும், கூர்மைக்கும் கொண்டு வந்து, அகத்தாய்வால் நமது இருப்புகளைக் கணக்கெடுத்து, புதிய திட்டத்தால் ஆக்க வாழ்வுக்கு வழி செய்து கொள்ள வேண்டும். மெளன நோன்பின் உண்மை நோக்கமறிந்து விழிப்புடன் காலத்தைப் பயன்படுத்தி, ஆன்மத் தூய்மையும், வாழ்வின் வளமும் பெறுவோம். தான், குடும்பம், உற்றார், ஊர், உலகம் என்ற ஐந்து பிரிவுகளையும் பல தடவை வாழ்த்தி அமைதி காண்போம்.

மோனநிலையின் பெருமை யார் எவர்க்கு
முன்படர்ந்து வாயாலே சொல்லக்கூடும்?
மோனமே அறிவினது அடித்தளம் ஆம்;
மிகவிரிவு! எல்லையில்லை! காலம் இல்லை!

மோனத்தின் அறிவு தோய்ந்து பிறந்தால்,
முன்வினையும் பின்வினையும் நீக்கக் கற்கும்;
மோனநிலை மறவாது கடமை ஆற்ற,
மென்மை, இன்பம், நிறைவு, வெற்றி அமைதியுண்டாம்.
+ ஞானக் களஞ்சியம், (பாடல்:1640)

மோனமும் எண்ணமும்
மோனத்தில் வாய்மூட எண்ணாம் தோன்றும்
முனைந்தவன் யார் ? முடிவு எங்கே வளர்த்தாராய்
மோனநிலை திரிந்ததனால் எண்ணமாக
முனைந்துள்ளேன் யான் அன்றிப் பிற அங்கில்லை
மோனமும் பின் எண்ணமுமாய் மாறி மாற
முன்னது மெய் பின்னது உயிர் என விளங்கும்
மோனம் உயிர் மனம் மூன்றும் ஒன்றாய்க்காண
மோனத்தவம் கற்றாற்றி முனைப்பு ஒழிப்பீர்

விளக்கமும் பழக்கமும்
பேசா நோன் பாற்றுங்கால் அறிவு தன்னை
பழக்கங்கள் எவ்வாறு வலுவாய்மோதி
பேசா நோன்பைக் கலைத்துப் பேச வைக்கப்
பெரும் போரை நடத்துகின்றதென உணர்வோம்
பேசா நோன்பு இயற்கைக்கும் உயிர்க்கும் உள்ள
பிணைப்பை நன்குணர்ந்திட ஓர் நல்வாய்பாகும்
பேசா நோன்பென்பது வாய் மூடல் அல்ல
பெரியமறை பொருள் மனதை அறியும் ஆய்வே

+ வேதாத்திரி மகரிஷி

கண்ணாடிப் பயிற்சியுடன் மந்திரம்



கண்ணாடிப் பயிற்சியுடன் மந்திரம்

கண்ணாடிப் பயிற்சி செய்து வந்தால் வசிய சக்தி உண்டாகும் இது கண்ணாடிப் பயிற்சியின் ஒரு பலன் தானே தவிர அதுவே முழு பலனும் அல்ல என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்

கண்ணாடிப் பயிற்சி செய்பவர்கள் கண்ணாடிப் பயிற்சியுடன் சேர்த்து எதை வசியப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்குரிய வசிய மந்திரத்தை அறிந்து அதை உச்சாடணம் செய்ய வேண்டும்

கண்ணாடிப் பயிற்சியையும் வசிய மந்திரத்தையும் தொடர்ந்து செய்வதின் மூலம் வசியத்தை பெற முடியும் ஜக வசியம் முக வசியம் ராஜ வசியம் போன்ற பல்வேறு வசியங்களையும் பெற வேண்டுமானால் சர்வ சித்தி தனாஉறர்ஸன சங்கல்பம் என்ற ஒரு மந்திரம் இருக்கிறது அந்த மந்திரத்தை உச்சாடணம் செய்து கண்ணாடிப் பயிற்சியையும் தொடர்ந்து செய்து வர சர்வலோகமும் வசியமாகும்

இங்கே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் ,

சர்வ சித்தி தனாஉறர்ஸன சங்கல்பம் என்பது மந்திரம் ;

கண்ணாடி என்பது யந்திரம் ;

தந்திரம் என்ன என்பது தெரியவரும்போது தான் கண்ணாடிப் பயிற்சியின் சூட்சும வி‘யம் நமக்குத் தெரிந்து விடும்.

வேதாத்திரிய சிந்தனைகள் : - " க ர் ம யோ க ம் "


வேதாத்திரிய சிந்தனைகள் : - " க ர் ம யோ க ம் "

கர்ம யோகம் என்பது கடமை அறம் என்பதாகும். தனக்கும் சமுதாயத்திற்கும் எந்த துன்பமும் விளைவிக்காமல், நன்மையே தரக்கூடிய செயல்களை மட்டும் செய்து வாழ்வது கர்ம யோகம்.

கர்மம் என்றால் செயல். செயல் என்பது கடமையை குறிக்கின்றது. கடமை என்பது நன்றி உணர்வு. தொப்புள்கொடி (பிறப்பு) அறுப்பது

முதல் அரைஞான் கயிறு (இறப்பு) அறுப்பது வரை மனிதனானவன்பிறருடைய உதவியால் வாழ்ந்துவருகிறான். அவனது வாழ்வில்அவன் சாதித்ததாக நினைக்கும் அனைத்தும், அவன் பெற்றது அனைத்தும் சமுதாயத்தால் அவனுக்கு அளிக்கப் பட்டவைகளே.
இதை மனித மனம் உணர்ந்து தன்னால் இயன்ற அளவு, தன்னுடைய
அறிவைக்கொண்டும் பொருளைக்கொண்டும், உடலைக்கண்டும்
சமுதாயத்திற்கு என்ன செய்யமுடியுமோ அதை செய்து இன்புறுவது
கடமை ஆகும். இதுவும் ஒருவகையில் தொண்டு ஆகும்.

யோகம் என்றால் அறவாழ்வு. அறவாழ்வு என்பது விளைவறிந்த
விழிப்பு நிலையில் தனது எண்ணம், சொல், செயல்களை ஒழுங்கு
படுத்தி சமுதாயத்திற்கும், தனக்கும் ஒத்தும் உதவியும்
வாழக்கூடிய வாழ்வு ஆகும். இறைநீதி ஆனது நமது செயல்களுக்கு
ஏற்ற விளைவாக இன்பத்தையோ துன்பத்தையோ அளிக்கிறது என்பதை உணர்ந்து நன்மைகளை மட்டுமே ஆற்றி இன்பத்தை
மட்டுமே பெற்று வாழ்வது விளைவறிந்த விழிப்பு நிலை ஆகும்.
நம்மை வாழவைக்கின்ற சமுதாயத்திற்கு நம்மால் முடிந்ததை
திருப்பிசெலுத்துவதே கர்ம யோகம் எனும் கடமை அறம் ஆகும்

Saturday, April 5, 2014

வேதாத்திரி மகரிஷி அவர்களின் குண்டலினி யோகா தத்துவங்கள்



குண்டலினி யோகா தத்துவங்கள்

வேதாத்திரி மகரிஷி அவர்களின்

குண்டலினி யோகா தத்துவங்கள்

எளியமுறை குண்டலினி யோகம் ஆகிய மனவளக்கலையின் 4 அங்கங்கள் :


1 . தவம்

2 . தற்சோதனை

3 . குணநலப் பேறு

4 . முழுமைப் பேறு.


தஞ்சலி முனிவரின் யோக சூத்திரத்தின்

படி யோகத்தின் 8 அங்கங்கள்:


1 . இமயம்

2 . நியமம்

3 . ஆசனம்

4 . ப்ர்ணயமம்

5 . பிரதியாகரா

6 . தாரண

7 . தியானம்

8 . சமாதி


தீட்சை முறைகளைக் கூறும் சித்தர் பாடல்கள்.

----------ஸ்பரிச தீட்சை என்ற தொடு தீட்சை.


வாரணம் முட்டையிட்டு வயிற்றில்வைத் தணைத்துக் கொண்டு

பூரணக் கூடுண்டாக்கிப் பொரிந்திடுங்குஞ்சு போலக்

காரணக் குருவைமூலக் கனல்விளக் கதநாற கண்டு

நாரணன் அறியாநாகை நாதரைப் பணிவாய் நெஞ்சே


சட்சு தீட்சை என்ற நேத்திர தீட்சை


தண்ணீரி லிருக்கும்மீன்கள் தண்ணிரிற் கருவைப்பித்திக்

கண்ணினாற் பார்க்கும்போது கயலுறு வானாற்போல

நண்ணிய குருவைக்கண்டு நாதன்நல் லுருவைச் சேர்த்து

விண்ணின்மேல் நாகைநாதர் மெல்லடி வெளிபார் நெஞ்சே.


ஞானதீட்சை எனும் மானச தீட்சை


குளத்திலே கிடக்கும் ஆமை குளக்கரை முட்டையிட்டுக்

குளத்துநீர் குள்ளிருந்து குறிப்புடன் நினைக்கும் போது

குளத்திலே புதைத்தமுட்டை கருவுரு வானாற்போல்

உளத்திலே நாகைநாதர் உருவழிந் துணர்வாய் நெஞ்சே.

------------(கணபதிதாசர் நெஞ்சறி விளக்கம் பாடல்.


கருக்கொண்ட முட்டைதனைக் கடல்ஆமை தான் நினைக்க

உருக்கொண்ட வாறதுபோல் உன்னை அடைவது எக்காலம்.

-------------------(பத்ரகிரியார்


எளிய முறை குண்டலிணி யோகத்தின் மூன்று படிகள்:


1. ஆக்கினை தவம்

௨. துரியம்

3 . துரியாதீதம்


ஆதாரங்கள்:


1 . மூலாதாரம்

2 . சுவாதிஸ்டானம்

3 . மணிபூரகம்

4 . அனாகதம்

5 . விசுக்தி

6 . ஆக்கினை

7 . துரியம்


ஒன்பது மைய தவத்திற்கான 9 மையங்கள்


1 . மூலாதாரம்.

2 . சுவாதிஸ்டானம்

3 . மணி பூரகம்

4 . அனாகதம்

5 . விசுக்தி

6 . ஆக்கினை

7 . துரியம்

8 . சக்தி களம்

9 . சிவா களம்


கிரகங்கள்


1 . சூரியன்

2 . புதன்

3 . சுக்கிரன்

4 . சந்திரன்

5 . செவ்வாய்

6 . குரு

7 . சனி

8 . ராகு

9 . கேது


தற்சோதனையில் 5 அங்கங்கள்


1 . எண்ணம் ஆராய்தல்

2 . ஆசை சீரமைத்தல்

3 . சினம் தவிர்த்தல்

4 . கவலை ஒழித்தல்

5 . நான் யார்?


விபாகப் பிராணாயாமம் : இதுவே பிராணாயாமா எனப்படும் மூச்சுப்பயிற்சிகளின் அடிப்படை ஆகும். விபாகப் பிராணாயாமா நான்கு பகுதிகளைக் கொண்டது.

1, அதம வகை

2, மத்யமா வகை

3, ஆதயம வகை

4, உத்தம வகை

5, அனுநாசிக சுவாச முறைகள் 1, 2, 3.

6, முகபஸ்த்ரிக்கா (முக வசீகரத்திற்கு)

7, முக தெளதி

8, நாய் போல் சுவாசம் 1, 2.

9, அணில் முறை சுவாசம்

10, முயல் முறை சுவாசம். 1, 2, 3.

11, புலி போல் சுவாசம்

மேற்சொன்ன பதினொரு வகைப் பயிற்சிகளும் பிராணாயாமப் பயிற்சிக்கு தயார் படுத்தும் மூச்சுப் பயிற்சிகள் ஆகும்.


மனதின் 10 இதழ்கள்


1 . உணர்ச்சி

2 . தேவை

3 . முயற்சி

4 . செயல்

5 . விளைவு

6 . அனுபோகம்

7 . அனுபவம்

8 . ஆராய்ச்சி

9 . தெளிவு

10. முடிவு


மனதின் 4 இயக்கப் படிகள்

1 . புற மனம் (புத்தி, போத அறிவு) (conscious mind )

2 . நடு மனம் (சித்தம், சிற்றறிவு) (sub -conscious mind)

3 . அடி மனம் (அகங்காரம், பேரறிவு) (super -conscious mind)

4 . தெய்வ நிலை ஒழிவில் ஒடுக்கம் ( un conscious mind)


மனம் செயல்படும் 3 துறைகள்:

1 . எண்ணம்

2 . சொல்

3 . செயல்


மனதின் 3 நிலைகள்:

1 . உணர்ச்சி நிலை

2 . விழிப்பு நிலை

3 . யோக நிலை


மனம் 4 வித அலை இயக்கங்கள்:

1 . பீட்டா wave (14 to 40 cycle / second )

2 . ஆல்பா wave (8 to 13 cycle / second )

3 . தீட்டா wave (4 to 7 cycle / second )

4 . டெல்டா wave (14 to 40 cycle / second )


மனம் உணர்ச்சி நிலையில் நின்று செயல் படும் பொது தோன்றும் 4 விளைவுகள்

1 . மையை அல்லது அறு குணம்

2 . கனவு

3 . தூக்கம்

4 . மயக்கம் (அனதேசியா)


மனம் விழிப்பு நிலையில் நின்று செயல் படும் பொது தோன்றும் 4 விளைவுகள்:

1 . சாக்கிரதை (திரி கால ஞானம்)

2 . சிந்தனை

3 . சகஜ நிட்டை

4 . தெய்வம்


மனம் யோக நிலையில் நின்று செயல் படும் பொது தோன்றும் 3 விளைவுகள்:

1 . ஆக்கினை

2 . துரியம்

3 . துரியாதிதம் (சமாதி)


திரிகால ஞானத்தின் 3 அம்சங்கள்

1 . முற்கால அனுபவம்

2 . தற்கால தேவையும் சூழ்நிலையும்

3 . எதிர்கால விளைவு.


மனம் செயல்படும் மார்கங்கள்:

1 . பிரவிருத்தி மார்க்கம்

2 . நிவர்த்தி மார்க்கம்


மனம் உணர்ச்சி நிலையில் செயல்படும் பொது ஏற்படும் 6 குணங்கள்

1 . பேராசை

2 . சினம்

3 . கடும் பற்று

4 . கற்பு அழிவு

5 . உயர்வு தாழ்வு மனப்பான்மை

6 . வஞ்சம்


மனம் விழிப்பு நிலையில் செயல் படும் போது ஏற்படும் 6 நலன்கள்:

1 . நிறை மனம்

2 . பொறுமை

3 . ஈகை

4 . கற்பு நெறி

5 . சம நோக்கு நேர் நிறை உணர்வு

6 . மன்னிப்பு


மன நிலைக்கு முன்னோர் வைத்த 5 கோசங்கள்:

1 . அன்னமய கோசம்

2 . மனோமய கோசம்

3 . பிரணமய கோசம்

4 . விஞ்ஞானமய கோசம்

5 . ஆனந்தமய கோசம்


எண்ணம் எழுவதற்கான 6 காரணங்கள்

1 . தேவை

2 . பழக்கம்

3 . சூழ்நிலை

4 . கருவமைப்பு

5 . பிறர் மனத்தூண்டுதல்

6 . தெய்வீகம்


உணர்ச்சியின் 2 விதப் பகுப்புகள்

1 . இன்பம்

2 . துன்பம்


உணர்சிகளின் வளர்ச்சி மற்றும் சிறப்புகளுக்கேற்ப கொடுக்கப்படும் 3 பெயர்கள்:

1 . மனம்

2 . அறிவு

3 . ஞானம்


ஞானத்தின் 2 வகைகள்:

1 . விஞ்ஞானம்

2 . மெய்ஞானம்


அறிவு வளர்ச்சியின் 4 நிலைகள்:

1 . இயற்கை தேவைகள் நிறைவு செய்து கொள்ளல் மட்டும்

2 . இயற்கை அழகுகளை ரசித்தல் மற்றும் போலி செய்தல்

3 . இயற்கை ரகசியங்களை அறிந்து கொள்ள முயலல், அறிந்து கொள்ளல்

4 . இயற்கைக்கும் தனக்கும் மூலம் நாடி நிற்றல், அடைதல்


உணர்சிகளின் நிலை

1)இன்பம்,

2)துன்பம்,

3)அமைதி,

4)பேரின்பம்


அறிவு வளர்ச்சியின் நிலைகள் வாழ்க்கையில் உருவாக்கிய 4 துறைகள்


1 . பொருளாதாரமும் அரசியலும்

2 . கலைகள்

3 . விண்ஞானம்

4 . மெய்ஞானம்


சமுதாய வாழ்க்கையின் 5 அம்சங்கள்


1 . சுகாதாரம்

2 . பொருளாதாரம்

3 . அரசியல்

4 . விஞ்ஞானம்

5 . தத்துவஞானம்


ஆசை ஒழுங்கில் கவனிக்க வேண்டிய 3 அம்சங்கள்


1 . தேவை தானா?

2 . வாய்ப்பு வசதி உண்டா ?

3 . பின் விளைவு என்ன?


நலம் விளைக்கும் ஆசைகளை நிறை செய்யும் 3 கட்டங்கள்


1 . திட்டம்

2 . செயல்

3 . வெற்றி


ஆசைக்கு முன்னோர் செய்த 3 பகுப்புகள்


1 . மண்ணாசை

2 . பொண்ணாசை

3 . பெண்ணாசை


அறிவின் 2 தரங்கள்


1 . பொருளறிவு

2 . உயிரறிவு


கவலை ஒழிப்பில் சிக்கல்களைப் பகுக்க வேண்டிய 4 பகுப்புகள்


1 . உடனடியாக தீர்க்கப் பட வேண்டிய சிக்கல்கள்

2 . ஏற்று அனுபவித்தாக வேண்டிய சிக்கல்கள்

3 . தக்க காலத்தில் தீர்ப்பதற்காக தள்ளி போட வேண்டிய சிக்கல்கள்

4 . அலட்சியம் செய்து ஒதுக்கி விட வேண்டிய சிக்கல்கள்


பிரபஞ்ச தோற்றங்களையும் இயக்கங்களையும் அறியும் 5 கருவிகள் (ஞானேந்திரியங்கள்)


1 . கண்கள்

2 . காதுகள்

3 . மூக்கு

4 . நாக்கு

5 . தோல்


பிரபஞ்ச இயக்கங்களாகவும் தோற்றங்களையும் விளங்கும் 5 பூதங்கள்


1 . விண்

2 . காற்று

3 . நெருப்பு

4 . நீர்

5 . நிலம்


5 உணர்வுகள்


1 . அழுத்தம்

2 . ஒலி

3 . ஒளி

4 . சுவை

5 . மணம்


5 தொழில் கருவிகள்


1 . கைகள்

2 . கால்கள்

3 . வாய்

4 . குதம் (மலத் துவாரம்)

5 . குய்யம் (பால் உறுப்பு)


மனிதனின் 7 செல்வங்கள்


1 . உருவ அமைப்பு

2 . குண நலம்

3 . அறிவின் உயர்வு

4 . புகழ்

5 . உடல் வலிமை

6 . உடல் நலம்

7 . செல்வ வளம்


மனிதருள் வேருபாடுக்கான 16 காரணங்கள்


1 . கருவமைப்பு

2 . ஆகாரம்

3 . காலம்

4 . தேசம்

5 . கல்வி

6 . தொழில்

7 . அரசாங்கம்

8 . கலை

9 . முயற்சி

10 . பருவம்

11 . நட்பு

12 சந்தர்ப்பம்

13 . ஆராய்ச்சி

14 . பழக்கம்

15 . வழக்கம்

16 . ஒழுக்கம்.


மனித வாழ்வின் 4 பேறுகள்


1 . அறம்

2 . பொருள்

3 . என்பம்

4 . வீடு


மனித வாழ்க்கையின் 3 குணங்கள்


1 . இயற்கை நியதி

2 . இன்ப துன்பங்களின் தோற்றம், பெருக்கம், மாற்றம்

3 . சமுதாய அமைப்பு


4 ஆஸ்ரமங்கள்


1 . இளமை நோம்பு (பிரம்மச்சரியம்)

2 . இல்லறம் (கிரகஸ்தம்)

3 . தவம் (வானபிரஸ்தம்)

4 . தொண்டு (சன்யாசம்)


வாழ்க்கை தத்துவங்கள்:


1 . தேவைகள் மூன்று

3 தேவைகள்


1 . பசி, தாகத்தால் எழுபவை

2 . உடல் கழிவு பொருள்களின் உந்து வேகத்தால் எழுபவை

3 . வெப்ப, தட்ப ஏற்ற தாழ்வினால் எழுபவை


2 . காப்புகள் மூன்று

3 காப்புகள்


1 . வேற்றுயிர் பகையிலிருந்து

2 . இயற்கை சிற்றத்திலிருந்து

3 . தற்செயல் விபத்துகளிலிருந்து


3 . அறநெறிகள் மூன்று

3 அறநெறிகள்


1 . ஒழுக்கம்

2 . கடமை

3 . ஈகை


4 . அறிவு வளர்ச்சி படிகள் மூன்று

3 அறிவு வளர்ச்சி படிகள்


1 . நம்பிக்கை

2 . விளக்கம்

3 . முழுமைப்பேறு


கடமை ஆற்ற வேண்டிய 5 துறைகள்


1. உடல்

2. குடும்பம்

3. சுற்றம்

4. ஊர்

5. உலகம்


வாழ்கையில் பங்கு பெறும் 2 சக்திகள்


1. விதி

2. மதி


கல்வியின் 4 அம்சங்கள்


1 . எழுத்தறிவு

2 . தொழில் அறிவு

3 . இயற்கை தத்துவ அறிவு

4. ஒழுக்க பழக்கங்கள்


உடல் நலம் காக்கப் பெற வேண்டுமாயின் அடக்கப்படக் கூடாத 14 அம்சங்கள்


1 . தூக்கம்

2 . தாகம்

3 . சிறு நீர்

4 . தும்மல்

5 . இருமல்

6 . வாந்தி

7 . பசி

8 . கொட்டாவி

9 . மலம்

10 . ஏப்பம்

11 . தது

12 . கண்ணீர்

13 . அபான வாவு

14 . மூச்சு


7 தாதுக்கள்


1 . ரசம்

2 . ரத்தம்

3 . சதை

4 . கொழுப்பு

5 . எலும்பு

6 . மூளை

7 . விந்து நாதம்


16 இயற்கை தத்துவங்கள்:


1 . இயக்க ஒழுங்கு 4

இயற்கையின் 4 இயக்க ஒழுங்குகள்


1 . மெய்ப்பொருள்

2. ஆற்றல்

3 . திணிவு

4 . உணர்வு


2 . இயக்க கணிப்பு 4

இயற்கையின் 4 இயக்க கநிப்புகள்


1. விரைவு

2. பருமண்

3. காலம்

4. தூரம்


3 . இயற்கை நியதி 4

இயற்கையின் இயக்க நீயதிகள்


1. காரணாம்

2. விளைவு

3. பயன்

4. தொடர் பயன்


4 . இயக்க வேறுபாடு 4

இயற்கையின் 4 இயக்க வேறுபாடுகள்


1 . தன்னியக்கம்

2 . தொடரியக்கம்

3 . பிரதிபலிப்பு இயக்கம்

4 . விளைவு


இயற்கையின் 3 நிலைகள்


1 . இருப்பு நிலை

2 . இயக்க நிலை

3 . உணர்ச்சி நிலை


பிரபஞ்சத்தை இயக்கும் 2 ஆற்றல்கள்


1 . ஈர்ப்பு ஆற்றல்

2 . தள்ளும் ஆற்றல்


ஆகாசத்தின் 3 நிலைகள்


1 . மகாகாசம்

2 . பூதாகாசம்

3 . சித்தாகாசம்


ஆகாசத்திற்கு விஞ்ஞானிகள் வகுக்கும் 3 பகுப்பு பெயர்கள்


1 . எலக்ட்ரான்

2 . புரோட்டான்

3 . நியுட்ரான்


பிறவித் தொடர் நீள்வதற்கு காரணமான ஆன்மாவினது 3 களங்கங்கள்


1 . ஆணவம் (தன்னிலை விளங்காமை)

௨. கண்மம் (பாவப் பதிவுகள்)

3 . மாயை (நிறைவுரா ஆசைகள்)


பாவ பதிவுகளின் 3 விதப் பகுப்புகள்


1 . சஞ்சித கர்மம்

2 . பிராரப்த கர்மம்

3. ஆகாமிய கர்மம்


மரணத்தின் 3 விதங்கள்


1 . இயற்கை மரணம்

2 . துர் மரணம்

3 . முக்தி


இறப்பிற்கு பின் உயிர் அடையும் 3 நிலைகள்


1 . பங்கீடு

2 . பைசாசம்

3 . வீடுபேறு


வீடு பேறுக்கு முன்னோர்கள் செய்த 4 பகுப்புகள்


1 . சாலோகம்

2 . சாரூபம்

3 . சாமீபம்

4 . சாயுச்சியம்


இயற்கையான 3 துன்பங்கள்


1 . பசி, தாகம்

2 . வெப்ப, தட்ப ஏற்ற தாழ்வுகள்

3 . உடல் கழிவு பொருள்களின் உந்து வேகம்


6 மதங்கள்


1 . சௌரம்

2 . சைவம்

3 . சாக்தம்

4 . கௌமாரம்

5 . காணபத்யம்

6 . வைணவம்


பாவ பதிவுகளை போக்கும் 3 முறைகள்


1 . பிராயசித்தம்

2 . மேல் பதிவு

3 . தேய்த்து அழித்தல்


யோகத்தின் 4 பிரிவுகள்


1 . பக்தி யோகம்

2 . கர்ம யோகம்

3 . இராஜ யோகம்

4 . ஞான யோகம்


ஐந்தினைப்புப் பண்பாட்டின் 5 அங்கங்கள்


1 . விழிப்பு நிலை

2 . தற் சோதனை

3 . கடமை உணர்வு

4 . ஒழுக்க உணர்வு

5 . இறை உணர்வு


தெய்வத்தின் பல்வேறு பெயர்கள்


1 . பிரம்மம்

2 . ஆதி

3 . மூலம்

4 . ஆதி மூலம்

5 . அனாதி ......

6 . அந்தம்

7 . பொருள்

8 . மெய்ப்பொருள்

9 . மெய்

10 . பரம் ......

11 . பரம் பொருள்

12 . தெய்வம்

13 . கடவுள்

14 . ஈசன்

15 . இறைவன் .........

16 . இறை

17 . பகவன்

18 . சிவம்

19 . ஆதாரம்

20 . பேராதாரம் .......

21 மோனம்

22 . மௌனம்

23 . இருப்பு

24 . இருள்

25 . பூரணம் ........

26 . பரி பூரணம்

27 . அகண்டகம்

28 . அகண்டாகாரம்

29 . வெளி

30 . பெரு வெளி ........

31. பேராதார பேரு வெளி

32 . நிர்வாணம்

33 . தேவன்

34 . நித்தியம்

35 . சத் ..............

36 . சத்தியம்

37. வன்மை

38 . சூனியம்

39 . இயற்கை

40 . எல் ...........

41 . நிமலம்

42 . நிர்மலம்

43 . நின்மலம்

44 . ஆனந்தம்

45 . வீடு ............

46 . almighty

47 . providence

48 . god

49 . divine

50 . omnipresent .............

51. Omniscient

52 . Omnipotent

53 . Truth

54 . Space

55 . ஆகர்ஷணம் ...........

56 . இயற்கை

57 . Nil State

58 . Static State

59 . Absolute

60 . சிவகளம் .............

61 . சுத்த வெளி

62 . பரவெளி

63 . ஆண்டவன்

64 . பகவான்


ஆகாசத்தின் வேறு பெயர்கள்

1 . விண்

2 . அணு

3 . பரமாணு

4 . உயிர்

5 . சக்தி ..........

6 . ஆற்றல்

7 . துகள்

8 . இயக்கம்

9 . அசைவு

10 . சுழல் ..........

11 . கண்டம்

12 . ஆன்மா

13 . ஆத்மா

14 . காந்தம்

15 . பிரதிகிருஷ்ணம் ............

16 . அணுத்துகள்

17 . Life

18 . Energy

19 . Life Energy

20 . Ether ...........

21. Etherial particle

22. Electron

23. Proton

24. Neutron

25. Divine Power ...........

26. Magnetism

27. Atomic particle

28. sith

29. soul

30. pranan


பிரபஞ்சத்தின் பல்வேறு பெயர்கள்


1 . அண்டம்

2 . பேரியக்க மண்டலம்

3 . பேரியக்கக் களம்

4 . உலகம்

5 . உலகு ..........


குண்டலினி யோகத்தின் பல்வேறு பெயர்கள்

1 . மனவக்கலை

2 . கருதவம்

3 . சுக்கில தியானம்

4 . ராஜ யோகம்

5 . அகத்தவம்

6 . அகநோக்கு தவம்

7 . Inner Travel .


மனதின் 3 வேலைகள்


1 . மறதி நிலை

2 . விழிப்பு நிலை

3 . யோக நிலை


மனதின் 4 வகைகள்


1 . புற மனம்

2 . நடு மனம்

3 . அடி மனம்

4 . நிலை பேறு

மறதி நிலை


புறமனம் - மாயை - அறுகுணம்

நடு மனம் - லேசான தூக்கம் - கனவு

அடிமனம் - ஆழ்ந்த தூக்கம்

நிலைபேறு - மயக்கம் - அனச்தேசிய


வாழ்க வளமுடன்


-வேதாத்திரி மகரிஷி

Friday, January 3, 2014

இறைநீதி -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

இறைநிலை எங்குமே உள்ளது. அதை உணர்ந்தால், அது செய்யக் கூடிய காரியமெல்லாம் நீதியானது என விளங்கும். எந்த இடத்திலும் தவறு இருக்கவே முடியாது. இதை நல்ல முறையிலே தெரிந்து கொண்டால், 'ஐயோ! நான் கடவுளுக்கு ஐந்து தேங்காய் உடைத்தேனே! இன்னும் என் குழந்தைகள் சரியாகவில்லையே' என்று வருந்த மாட்டோம். தேங்காய் உடைக்கும் முன், நாம் செய்த தவறுகள் எத்தனை? அதெல்லாம் அல்லவா இப்போது துன்ப விளைவாக வருகின்றன! அதனால், 'அந்த இறைவனுக்குக் கண்ணில்லையே!' என்று சொல்லும் அளவுக்கு போகக் கூடாது. இறைவன் செய்வதில் தவறு ஏற்படாது என்ற உண்மையை உணர்ந்து உணர்ந்து, இறைவனுடைய செயல் எல்லா இடத்திலும் நீதியாகவே இருப்பதைக் கண்டு கொள்ளுங்கள். அந்த இடத்திலே பிறப்பது தான் அமைதி. இன்றைக்கு நம்மிடம் ஒரு பொருள் இருக்கிறது. அதைக் கொடுத்தவன் இறைவன். உடல்நலம், அறிவு, செல்வம், பதவி இவ்வளவையும் கொடுத்தவன் இறைவன். ஆனால் 'இன்னும் எனக்கு வரவேண்டிய பதவி உயர்வு வரவில்லையே! எப்போதோ வர வேண்டுமே! இன்னும் வரவில்லையே!' என்று குறைபடுகிறோம். அதனால் என்ன ஆனது? நமக்கு இருக்கின்ற ஆனந்தம், இன்பம் எல்லாவற்றையும் விட்டுவிடுகிறோம். கற்பனையினால் எல்லைகட்டி ஒரு வரையறை செய்து கொள்கிறோம். இருந்த இன்பமும் போய் விடுகிறது. இவ்வளவையும் கொடுத்தவன், இறைவனே தான். எல்லை கட்டிய மனநிலையில் நாம் 'இப்படித்தான் இருக்க வேண்டும். அப்படித்தான் இருக்க வேண்டும். இதுதான் நல்ல்து, அது கெட்டது' என்று நினைக்கிறோம். இது உண்மையில் நல்லதா? நல்லதாகவும் இருக்கலாம். கெட்டதாகவும் இருக்கலாம். ஆனால், கற்பனையில் நாம் வரையறை செய்து கொள்கிறோம். கற்பனையான நிலையில் இருக்கும் வரையில், நாம் இதுவரை பெற்றதைப் பாராட்டாமல், அதை அனுபவிக்கத் தெரியாமல், 'அந்தப் பொருள் இருந்தால் நன்றாக இருக்கும், இந்தப் பொருள் இருந்தால் நன்றாக இருக்கும்' என்று மனதை மறுபுறம் திருப்பிவிட்டுக் கொள்கிறோம். இவ்வளவையும் அனுபவிப்பது யார்? இதுவரைக்கும் இவ்வளவையும் கொடுத்தானே இறைவன் அதை மறந்து விடுகிறோம். 

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி 

Thursday, January 2, 2014

01-01-2014 உலக நல வேள்வி நாள்

01.01.2014 அன்று பாபநாசம் மனவளக்கலை மன்ற தவ மையத்தில் உலக நல வேள்வி நாள் நடைபெற்றது இதில் 50 அன்பர்கள் கலந்து கொண்டு வேதாத்திரி மகரிஷியின் உலக நல வேள்வி நாளை சிறப்பித்தார்கள் .

மேலும் அனைவரும் "வாழ்க வையகம்"    "வாழ்க வையகம்"              "வாழ்க வளமுடன் என்று 3 முறை வாழ்த்தி சிறப்பித்தார்கள் .



Temple of Consciousness, Mediation Centre - Kumbakonam.